Saturday, October 17, 2009

அடுத்து பெண்

உன்னை விடை கொடுத்து
பிரிய போகும்...
நிமிடங்களில் தான் நான் அறிந்தேன்
பிரிவின் துயரத்தை...

அடுத்து சூரியன்

ஒபாமா நோபல் பரிசு

ஒஅபாமாவுக்கு நோபல் பரிசு. ஒரு கண்ணோட்டம். உலகமே சேர்ந்து உற்றுநோக்கிய ஒரு தோற்றம். ஒபாமா வந்ததிலிருந்து ஒரே ஒரு ஒப்பாரி. நாங்கள் மாற்றுவோம். எப்போது எங்கே. இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று, அதாவது, கல்லாவில் பணமில்லை. இவரின் பேச்சை வைத்தே இவரை உளவுத்துறையினர், ஜனாதிபதி என்றபட்டத்துடன், கொண்டுவந்துவிட்டார்கள். அடுத்த்து, காலதேவனும், தான் செய்யவேண்டிய வேலைகளுக்காகவும், இவரைப்போல் ஒருவரை சகலமக்களின் மனங்களிலும் ஏற்றி , உலகத்தில் மிகப்பெரிய பதவியில் அமர்த்திவிட்டார். அமர்த்தியதும் தான் இவருடைய கதாபாத்திரத்தின் தன்மை எல்லோருக்கும் விளங்கியது. அவர் ஒரே கதைக்கிறாரோ இல்லையோ, அவரிடம் இராஜதந்திரமில்லை என்கிறது ஒரு பக்கம். இதெல்லாமிருக்கட்டும், ஏன் நோபல் பரிசு என்று என்னைமாதிரி வேறு கோணங்களில் யோசிப்பவர்களின் மனங்களில் இருந்து....

இப்பொழுது, இங்கே வருவோம், ஏன் இவருக்கு நோபல் பரிசு. இவர் வந்தவுடன், பல்வேறு தரப்பிட்த்துமிருந்தும் பல்வேறு கருத்து வேறுபாடுகள். இவர் வருமுன்பு உலகம் வெடித்துச்சிதறுமளவுக்கு பகைமை தோன்றி, காதல் அன்பு பாசம், நேசம் எல்லாமே சாலைகளில் வெறிச்சோடியிருந்தது. அந்தளவுக்கு மனமே வெறுத்துப்போன மக்கள், உயிரைமாய்த்துக்கொள்ளுமளவுக்கு உலகம் உருண்டுகொண்டிருந்தது. இங்கே அமெரிக்காவில், ஜனாதிபதிக்கு கீழே ஒரு மட்டக்குழு இருக்கின்றது. அதுதான் எல்லாவற்றையும் தனியே கவனித்துக்கொண்டிருக்கின்றது. ஈரானிலும் இருக்கின்றது. தமிழீழத்திலும் ஒரு நாள் இருந்தது தான். இப்படியே சொல்லிக்கொண்டிருக்கலாம்.... முதலில் ஒபாமாவுக்கு பலபக்கத்திலுமிருந்து நெருக்குதல். ஈரானுடன் பேச்சுவார்த்தை, ரஷ்யா ராச்சியத்துடன், அமைதிப்பேச்சு, அவர்களுக்கு முன்பு இருக்கும் ஆயுதங்களை அகற்றுதல், வட கொரியாவுடன் பேச்சு, வட கொரியர்களுடன், அமெரிக்கர்கள் பேசிக்கொண்டிருந்தவேளை, பேசிக்கொண்டிருந்தவர்கள் வைத்த வேண்டுகோள், நாங்கள் உங்களுடன் பேசுவதைவிட கிளின்டனுடன் பேசுவது என்றால் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதன் பின்னணி, இரண்டு அமெரிக்க பத்திரிக்கையாளர்களை, தங்களுடைய எல்லைகளுக்குள் தென் கொரியாவிலிருந்து அத்துமீறியதால் கைதுசெய்து தம்வசப்படுத்தி வைத்திருந்தார்கள். வட கொரியர்கள் பேச்சுவார்த்தை மேசையில் வல்லவர்கள், சூரர்கள். ஒரு பொழுது, கிளின்டன் ஜனாதிபதியாக இருந்த பொழுது, தனது ராஜதந்திரிகளை பேச்சுவார்த்தை மேஜையில் அமர்த்தி பேசிய பொழுது பல விடயங்கள் பற்றி பேசும் பொழுது, பல விட்டுக்கொடுப்புகளும் மேற்கொள்ளப்பட்ட்து. அதிலிருந்து வடகொரியர்கள் பலமுறை கிளின் டனுடன் பலவித பேசுசுவார்த்தைகளில் வென்றிருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டியனவற்றை பெற்றதற்குப்பிறகு. பின்பு, கிளின்டன், அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒருமாத பேச்சுவார்த்தைக்குப்பிறகு வடகொரியாவுக்கு சென்று அவர்களின் விடுதலைக்கு உதவினார். இதன் பிரதிபலிப்பு, ஒபாமாவுக்கே.

ஏன் ஏன் ஏன்???????

எனக்கு நாகேஷின் படம் தான் நினைவுக்கு வருகிறது. நினைவுக்குவரவில்லை. நீர்குமுழியாகவிருக்கும். அதில் நாகேஷ் தனது அலுவலகத்திற்கு நடந்து வருவார், அவரது உதவியாளர் பல முறை, ஒரு நபரைப்பற்றிப்போட்டுக்குடுத்துக்கொண்டிருப்பார். நாகேஷ் அவருக்கே பல பதவிகளைக்கொடுப்பார். ஆச்சர்யப்பட்ட உதவியாளர் கேட்பார். ஏன் சார் இவனுக்கு இந்தப்பதவியெல்லம் கொடுக்கிறீர்கள். அவன் தானே ஒன்னுக்குமே உதவாதவன் என்று. உடனே நாகேஷ் சொல்வார், ஒருவர் ஒர்ன்றுமே சொல்லவில்லையென்றா அவனுக்கு பதவிக்குமேல் பதவி பொறுப்புக்குமேல் பொறுப்புகொடுத்தால் அவனால் முடியும். அதனால் தான். அப்படித்தான் ஒபாமாவுக்கும் நோபல் பரிசு கொடுத்த்தன் பிண்ணனியும். ஏற்கனவே தமிழீழப்போராட்ட்த்தை தடுக்க இயலாமலும், உண்மையை தெரிந்துகொள்ளமுடியாமலும் சிதறடித்து, பொதுமக்களை இருபதாம் நூற்றாண்டில் எங்குமில்லாத அளவு கொலைகள், கற்பழிப்புகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்து, ஜநாசபை என்ற போர்வையில் எல்லாதவறுகளையும் சவையேற்றியவருக்கு இவ்வளவு பொறுப்பு கொடுக்கப்பட்ட்து வரவேற்க்கத்தக்கது.

இன்று ஜிம்மி கார்ட்டர் சொல்கிறார், இந்தபரிசு இவருக்கே உரியது.