Wednesday, June 17, 2009

தீர்மானம்

உள்ளிருக்கும் நல்லதும் கெட்டதுமல்லவா
நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன

நாணல்

மரங்களும் சாய்ந்துவிழும் கடும் புயலில்
பணிந்து போதல் என்கின்ற ஒற்றைப்பண்பினால்
நாணல்
உயிர் பிளைக்கிறது

துரு

வலிமை வாய்ந்த இரும்புத்தூணை
வெளியிலிருந்து ஏதும் வீழ்த்துவதில்லை

அதனுள் தோன்றும்
துரு சாய்த்துவிடுகிறது

Friday, June 5, 2009

நதி

ஓடிக்கொண்டிருக்கும் நதி நகரங்களை உண்டாக்கி,
நகரிகங்களை உருவாக்கிறது
நகருகிற நதி நாகரிகத்தின் நாற்றாங்கால்
நகராமல் இருக்கும் நீர் கொசுக்களின் குடியிருப்பு

ஆறுகள் கலை பண்பாடுகளின் அன்னை
பதுங்கிய நீர் நுண்கிருமிகளின் பண்ணை

பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம்....
ஒவ்வொன்றும் ஒருவிதம்.....

ஆம்
குருவி, கிளி, மைனா, புறா, மயில்,
அன்னம், காகம், கழுகு என்று அடுக்கிக்கொண்டு போகலாம்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் அழகு.
ஒவ்வொன்றிற்கும் சில உணவுப்பழக்கங்கள்.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வலிமை.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உயரத்தில் பறக்கும் தன்மை.

கழுகைப் போல, குருவியால் பறக்க முடியுமா?

காகம் தெருவில் இறந்து கிடைக்கும் நாயின் எச்சங்களைத் தின்னும்.
கிளியும், குருவியும் அதைத் தின்னுமா?
தின்னாது.
என்ன பசியாக இருந்தாலும் அதை, அந்த அசிங்கத்தைத் தொடாது.

தனக்கென உரிய தானியங்களை,
மற்றும் கனிகளை மட்டுமே தேடிப்பிடித்து அவைகள் உண்ணும்.

அதிசயம் என்ன வென்றால்,
எண்ணற்ற பறவைகளைப் படைத்த
இறைவன் அவற்றிற்கு உரிய உணவையும் தந்திருக்கிறான்.