Saturday, July 25, 2009

[பச்சை]

பச்சை பச்சை
என்று கத்துவோர்
கவனத்துக்கு
ஒரு நிமிடம்
ஹலோ...... ஹலோ.....
இங்கே.... இங்கே....
வாங்க... வாங்க......
ம்ம்ம்ம்ம்...
இந்த சீமேந்து தட்டுகளை
பூமிக்குமேல் போர்வையாக போட்டு
சூரியனிடமிருந்து இயற்கையாக வரும்
ஒளியை மறைத்து
இரசாயன பாசாணங்களை தூவி
பச்சையை வீணாக அழித்து

பிரபல வெப்ப நகரங்களை உருவாக்கி
இயற்கையின் சீற்றத்துக்கு உட்படுத்திவிட்டு
முழி பிதுங்கி நிற்கும் விண்ணர்களே
உங்களை நான் வரவேற்கிறேன்
வாழ்க நிம் செயல்,
தொழில்நுட்பம்
ஆனால்,
பின்னோக்கி ஒரு முறை வரலாற்றை புரட்டவேண்டும்
முன்பொருகாலத்தில்,
இதுபோன்ற தொழில் நுட்பங்கள்
இருந்திருக்கின்றன
புரட்டுங்கள்...
பண்டைய தொழில்நுட்பவியலாளர்கள்
இதனைவிட இன்னும் பல தொழில் நுட்பங்களை கையாண்டிருக்கிறார்கள்
இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பார்றியிருக்கிறார்கள்

1 comment:

  1. நாடுபிடிக்கப்புற்ப்பட்ட மேலை
    நாட்டார் தங்கள் தொழில்
    நுட்பம்தான் சிறதது
    என்ற அகம்பாவத்தால் பண்டைய
    தொழில் நுட்பவியாளர்களின் சிற்ந்த
    முறைகளை அழித்துவிட்டர்கள்
    என்பது மிகக்கொடுமையான செயல்.

    ReplyDelete